ஷாருக்கானிடம் `அமைதியாக இருங்க’ என சொன்ன ஆனந்த் அம்பானி – வைரல் வீடியோவை நீக்க 48 மணி நேரம் கெடு! | Anant Ambani tells actor Shah Rukh Khan to “stay calm”—notice issued to the person who shared the video.

Spread the love

இந்த வீடியோக்களை மீண்டும் வெளியிடுவதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தும் அனைத்துத் தலைப்புகள் மற்றும் கருத்துகளை நீக்கவோ அல்லது திருத்தவோ வேண்டும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை, அசல் வீடியோ காட்சிகள் மற்றும் தொடர்புடைய தகவல் தொடர்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிமொழியைச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸைப் பெற்ற பிறகு, சுவிக்யா சர்மா சட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மற்றொரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். தனது ரீல்ஸ் வீடியோவிற்கு ஷாருக்கான் ஆட்சேபனை தெரிவிப்பதைக் கேள்வி எழுப்பியுள்ள அவர், வைரலான வீடியோ குறித்த தனது கருத்துச் சுதந்திரத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட விமர்சனம் என்று வாதிட்டுள்ளார்.

மேலும் ஷாருக்கானை வாயை மூடிக்கொள்ளச் சொன்னவர் அவரை அவமானப்படுத்தவில்லையா? அல்லது அவரை அவமானப்படுத்தியதாகச் சொல்ல ஷாருக்கானுக்கு தைரியம் இல்லையா? ஆனால் வெளிப்படையாக, நாங்கள் அவரை அவமதித்துவிட்டோம் என்று அவர் இரண்டாவது வீடியோவில் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *