ஸ்டாலின் – மம்தா தோல்வி: இரண்டு மாநிலங்களில் அரசியல் அதிர்ச்சி|From Kolathur to Bhabanipur: Shock Defeats Rock Politics

Spread the love

2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப்போதில் இருந்து மேற்கு வங்க மக்களின் கண்கள் பாஜகவை உற்றுநோக்கத் தொடங்கியது.

இதன் விளைவு, மெல்ல மெல்ல பாஜக திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையான மேற்கு வங்கத்தில் காலூன்ற தொடங்கியது. அதற்கான மாபெரும் பதில் தான் இப்போதைய வெற்றி.

திரிணாமுல் காங்கிரஸ் மீதான இந்த அதிருப்தியை தான் பகடை காயாகப் பயன்படுத்தியிருக்கிறது பாஜக. அதன் உச்சமாக தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவேந்துவை மம்தா போட்டியிடும் தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட அறிவுறுத்தியிருந்தார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீதான அதிருப்தி வளர, பாஜக பக்கம் மக்கள் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், பாஜகவின் வலுவான முகமான சுவேந்து பவானிப்பூர் தொகுதியில் நிற்க, அந்தத் தொகுதி மக்கள் அவரை டிக் செய்துள்ளனர்.

பவானிப்பூரில் 2021-ம் ஆண்டு 72 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த மம்தா, தற்போது 42 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இதையும் உற்றுநோக்க வேண்டும்.

மேலும், பாஜக பவானிப்பூரில் மம்தாவை டார்கெட் செய்து பிரசாரம் செய்யாமல், அந்த மக்களின் மனதில் “ஆட்சி மாற்றம் தேவை’ என்பதை கொண்டு சேர்த்தனர்.

சிறப்பு தீவிர திருத்தத்திற்கும் மம்தா தோல்வியில் குறிப்பிட்ட அளவு பங்கு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *