Front-லும் Rear-லும் 4K… கேமராவில் கவனம்!
Content creators மற்றும் photography ஆர்வலர்களுக்காக camera segment-ல் vivo S2 பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
இதில் 50MP Sony Main Sensor camera மற்றும் 32MP Front Camera இடம்பெற்றுள்ளன. குறிப்பாக front மற்றும் rear ஆகிய இரண்டு கேமராக்களிலும் 4K video recording வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல… ஒரே நேரத்தில் front மற்றும் rear camera-களில் வீடியோ பதிவு செய்யும் Dual View Video வசதியும் இதில் உள்ளது. Vlog, interview, tutorial அல்லது reaction video எடுப்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், தேவையில்லாத பின்னணி பொருட்களை நீக்கி புகைப்படத்தை மேம்படுத்த உதவும் AI Erase 2.0 வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
Night, Portrait, Photo, Video, Panorama, Ultra HD Document, Slo-mo, Time-lapse, Supermoon, Pro, Food உள்ளிட்ட பல camera modes-ம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
Performance-க்கு Dimensity 7360-Turbo
வெறும் அழகான design மட்டும் இல்லாமல், performance-க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
MediaTek Dimensity 7360-Turbo processor மூலம் இயங்கும் vivo S2, 4nm process-ல் உருவாக்கப்பட்ட octa-core processor-ஐ கொண்டுள்ளது. இதன் maximum clock speed 2.5GHz வரை செல்கிறது.
மேலும், 3810 mm² vapor chamber கொண்ட Ultra-Large VC Smart Cooling System இடம்பெற்றுள்ளது. மொத்த cooling area 23,000 mm²-க்கும் அதிகமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
8GB RAM உடன் 128GB மற்றும் 256GB storage variants-ல் vivo S2 கிடைக்கிறது. அதோடு, software optimisation மூலம் 8GB வரை Extended RAM வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
7050 mAh பேட்டரி… நீண்ட நேர பயன்பாடு!
நாள் முழுவதும் smartphone-ஐ அதிகமாகப் பயன்படுத்துபவர்களை கருத்தில் கொண்டு, 7050 mAh பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 44W FlashCharge மற்றும் Battery Life Extender technology இடம்பெற்றுள்ளது.
Streaming, gaming, navigation, meetings என தொடர்ச்சியான பயன்பாட்டிலும் நீண்ட நேரம் battery backup கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், IP68 மற்றும் IP69 dust & water resistance மற்றும் military-grade durability ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.