ஹர்திக் பாண்டியா டீல் ஓவர்.. யாரும் கவலைப்படத் தேவையில்லை.. உண்மையை சொன்ன அஸ்வின் நண்பர்! | Hardik Pandya: Former RCB Analyst Prasanna Claims Hardik Pandya – Dube Swap Finalized Between CSK and MI

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஹர்திக் பாண்டியா டிரேட் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாக பிரபல அனலிஸ்ட் பிரசன்னா தெரிவித்துள்ளார். மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாகவும், சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டிரேட் பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் இரு அணி நிர்வாகங்களுமே இதுவரை அமைதி காத்து வருகின்றன.

Hardik Pandya

ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டும் அவ்வப்போது சில சிக்னல்களை கொடுத்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் பிரபல அனலிஸ்ட் மற்றும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான பிரசன்னா அகோரம் தனது யூட்யூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஹர்திக் பாண்டியா டிரேட் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது.

மும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வரப் போகிறார். சிஎஸ்கே அணியில் இருந்து சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் மும்பை அணிக்கு செல்ல உள்ளனர். மும்பை அணி அன்சுல் கம்போஜையும் சேர்த்து கேட்கிறது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் அன்சுல் கம்போஜை கொடுக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இந்த டிரேட் ஒப்பந்தம் இரு அணிகளுக்கும் சாதகமான ஒன்றுதான். ஏனென்றால் சிவம் துபேவுக்கு வான்கடே மைதானத்தில் பேட்டில் பட்டுக் கொண்டே இருக்கும். போல்ட் இடத்தை கலீல் அஹ்மத்தால் எளிதாக நிரப்ப முடியும். ரூதர்ஃபோர்ட் இடத்தில் சிவம் துபே இறங்குவார். இதன் மூலமாக மும்பை அணி இரு வெளிநாட்டு வீரர்களை வெளியேற்றிவிட்டு, வேறு சில வீரர்களை கொண்டு வர முடியும்.

இன்னொரு விஷயமும் கேள்விபடுகிறேன். உர்வில் படேலை குஜராத் அணிக்கு கொடுத்துவிட்டு, சாய் கிஷோரை சிஎஸ்கே வாங்க உள்ளது. குஜராத் அணியில் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் அவர் சிஎஸ்கே பக்கம் வர விரும்புகிறார். பிரசாந்த் வீராஇ சிஎஸ்கே அணி நிர்வாக இம்முறை ரிலீஸ் செய்துவிடும்.

ஹர்திக் பாண்டியா வந்துவிட்டால் 4 ஓவர்கள் பவுலிங், ஃபினிஷிங்கில் பேட்டிங் என்று அசத்தலாக அமையும். தோனி உடனிருக்கும் போது ஹர்திக் பாண்டியா கூடுதல் உற்சாகமாக இருப்பார். கேப்டன்சி குறித்து இப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய வலிமையை அடையும் என்று கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *