திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும் வாய்ந்த திருத்தலம் | thiruvannamalai devikapuram periyanayaki amman temple

Spread the love

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வழிபட வேண்டிய முருகன் திருத்தலங்களில் முக்கியமானது தேவிகாபுரம். இங்கே கனகிரீஸ்வரர்கோயில், பாலமுருகன் திருக்கோயில் மற்றும் பெரியநாயகரி அம்மன் திருக்கோயில் என அற்புதமான கோயில்கள் அமைந்துள்ளன.

வாருங்கள் அத்தலங்களைத் தரிசிப்போம். சென்னையிலிருந்து ஆரணி – திருவண்ணாமலை செல்லும் வழியில், 160 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இந்த ஊரின் நடுவே பெரியநாயகி அம்மன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் 150 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்த நிலையில் உயரமான ராஜகோபுரம் இதுவேயாகும்.

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்

கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபம், குதிரைகளுடன்கூடிய தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயின் மதில் சுவர் பிரமாண்டமானது. எனவேதான் ‘தேவிகாபுரம் மதிலழகு’ என்று குறிப்பிடுவார்கள் பெரியோர்கள்.

இந்த மதிற்சுவரில் நீண்ட பெரிய அளவில் இருக்கும் யானை, வராகம், குதிரை, மான், நரி ரிஷபக் குஞ்சரம் போன்ற சிற்பத் தொகுதிகள் வேறெந்த கோயிலிலும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

மூன்று பிராகாரங்களுடன் அமைந்த இக்கோயிலில் முதல் சுற்றில் உள்ள – ஐந்து கற்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட விநாயகர் வடிவம் சிறப்பு அம்சமாகும். வலப்பக்கத்தில் ஆறுமுகன் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

வலக்கரங்கள் ஆறில் சக்தி, வாள், சூலம், சக்கரம், அங்குசம் முதலியன கொண்டு ஒரு கரத்தில் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடக்கரங்களில் வஜ்ரசக்தி, தாமரை, பாசம், தண்டாயுதம், கதை ஆகியவற்றையும், ஒரு கரத்தால் அபய முத்திரையைக் காட்டியும் அருள்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *