ஹாஃப் பாயில் முட்டை சாப்பிடுவது ஆபத்தா? டயட்டீஷியன் விளக்கம்|Gym-Goers, Think Twice Before Eating Raw Eggs for Protein!

Spread the love

பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் உள்ள ‘அவிடின்’ (Avidin) என்ற பொருள், உடலில் பயோட்டின் (Biotin) சத்து உறிஞ்சப்படுவதைத் தடுத்துவிடும். முட்டையை வேகவைக்கும்போது இது செயலிழந்துவிடுகிறது.

எனவே, உடலமைப்பை மேம்படுத்த நினைப்பவர்கள் நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.”

ஒளிந்திருக்கும் பாக்டீரியா ஆபத்து!

ஹாஃப் பாயிலில் இருக்கும் ஆபத்து குறித்துப் பேசும்போது, “முட்டையின் வெள்ளைக்கருவோ, மஞ்சள்கருவோ முழுமையாக வேகாமல் இருந்தால், அதில் Salmonella (சால்மோனெல்லா) போன்ற நோய்க்கிருமிகள் உயிருடன் இருக்கக்கூடும்.

முட்டை பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிவதால் மட்டுமே அது பாதுகாப்பானது என்று கூற முடியாது. இந்தக் கிருமியால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்படலாம்.

குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் ஹாஃப் பாயில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *