திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய விகடன்; நெடுஞ்சாலையோரம் குவிந்திருந்த குப்பையை அகற்றிய ஊராட்சி நிர்வாகம் | Tirupattur Highway Garbage Heap Cleared After Vikatan Report

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி – திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், பாய்ச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ருத்ரன் திருச்சபைக்கு முன்பு சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்தன.

இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் பயணிகளும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் இருந்தது.

நெடுஞ்சாலையோரம் குவிந்திருந்த குப்பையை அகற்றிய ஊராட்சி நிர்வாகம்

நெடுஞ்சாலையோரம் குவிந்திருந்த குப்பையை அகற்றிய ஊராட்சி நிர்வாகம்

இந்த நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக நேரடியாக ஸ்பாட் விசிட் செய்து, கடந்த நவம்பர் 21-ம் தேதி, “திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய குப்பை மலை! துர்நாற்றத்தால் அவதிப்படும் பயணிகள்; ஊராட்சி நிர்வாகத்தின் விளக்கம்!’ என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும், இந்தப் பிரச்னையை பாய்ச்சல் ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம்.

இந்த நிலையில், விகடன் செய்தி எதிரொலியாக இன்று (நவம்பர் 24) பாய்ச்சல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சாலையோரத்தில் மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு, அந்தப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனிமேல் அங்கு குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

பொதுமக்களின் பிரச்னையைச் சுட்டிக்காட்டிய செய்தியைத் தொடர்ந்து, குப்பைகள் அகற்றப்பட்டிருப்பது அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *