ஹார்முஸை திறக்கலாம்! ஆனால்.. அமெரிக்காவுக்கு நிபந்தனை போட்ட ஈரான்! அமைதி திரும்புமா? | Iran Ready to Reopen Strait of Hormuz If US Meets Seven Conditions, but No Breakthrough Yet

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஈரானுடன் அமெரிக்கா போர் தொடங்கியதால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இந்தியா உட்பட உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், ஹார்முஸை நாங்கள் திறக்க ரெடி என்றும்.. ஆனால், சில நிபந்தனைகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்றும் ஈரான் கூறியிருக்கிறது.

நமக்கு கச்சா எண்ணெய் அரபு நாடுகளிலிருந்து வருகிறது. இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் எண்ணெய் போக வேண்டும் எனில்.. ஹார்முஸ் ஜலசந்திதான் ஒரே வழி. அதை ஈரான் தற்போது தனது கன்ட்ரோலில் வைத்திருக்கிறது.

Iran us

அமெரிக்கா இதை மீட்க தொடர்ந்து முயற்சிகளை செய்து வந்தாலும், எல்லா முயற்சிகளும் கை கொடுக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்படி இருக்கையில், ஜலசந்தியை ஓபன் செய்ய வேண்டும் எனில்.. அமெரிக்காவுக்கு சில நிபந்தனைகளை ஈரான் விதித்திருக்கிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “இந்த நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்றால் அமெரிக்கா தனது கடந்த கால தவறுகளை ஒப்புக்கொண்டு, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காசாவில் நடைபெற்ற வருவது இனப்படுகொலை. இது குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஈரான் முன் வைத்துள்ள பேச்சுவார்த்தை நிபந்தனைகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானுடன் மேற்கொள்ளப்படும் எந்த ஒப்பந்தமும் நிரந்தரமானதாகவே இருக்க வேண்டும் நான் விரும்புகிறேன். ஈரான் அணு ஆயுதங்களையோ அல்லது ரேடியேஷன் குண்டுகளையும் உருவாக்குவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை.

அந்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் எனக்கு எப்போதும் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், நாங்கள் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் மூத்த தலைமை பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய தலைமையை விட, இப்போது இருக்கும் ஈரானின் புதிய தலைமை அறிவுபூர்வமாக செயல்படுகிறது. இருந்தாலும் கூட ஒப்பந்தங்களை செய்துவிட்டு அவற்றை மீறி செயல்படுவது ஈரானுக்கு ஒன்றும் புதிதல்ல.

ஜலசந்தி விவகாரத்தை பொறுத்தவரை, அது முழுமையாக எங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அமெரிக்க கடற்படை அங்கு முற்றுகையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் தான் நாங்கள் இந்த ஜலசந்தி வழியாக அதிக அளவில் கச்சா எண்ணையை வெளியே கொண்டு வந்தோம்” என்றும் கூறியிருக்கிறார்.

ஈரான் நிபந்தனைகளை விதிப்பதும், அதை அமெரிக்கா ஏற்காமல் இப்படி பேசியிருப்பதையும் பார்த்தால் பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *