ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்.. அடுத்தடுத்து 2 கப்பல்கள் மூழ்கடிப்பு.. தாண்டவமாடும் ஈரான் | 2 ships including Container Vessels sink near Strait of Hormuz

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கண்ணிவெடி மற்றும் ஏவுகணை தாக்குதலில் சிக்கி கண்டெய்னர் கப்பல் உள்பட 2 சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த ஜலசந்தியை நிர்வகிப்பதில் ஈரான் – அமெரிக்கா இடையே போட்டி உள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது.

strait of hormuz ship iran

இதனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி உள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்த முடியும். அதோடு பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற முடியும். ஏற்கனவே அமெரிக்காவில் டீசல் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் ஈரானின் இந்த செயல் கூடுதலாக விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.

இது அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக ஈரான் மூடியுள்ளது. அதேபோல் ஹார்முஸ் ஜலசந்தியில் மாற்று பாதை ஒன்றிலும் கப்பல் போக்குவரத்தை தடை செய்ய ஈரான் கண்ணிவெடிகளை வைத்துள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 24 மணிநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் சென்ற ஜிஎஃப்எஸ் பிரைட் என்ற பெயர் கொண்ட கண்டெய்னர் கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கி உள்ளது.

இந்த கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானால் தடை செய்யப்பட்ட கடல்வழி பாதையில் பயணித்துள்ளது. அங்கு இருந்த கண்ணிவெடி வெடித்ததில் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கி உள்ளது. இந்த கப்பல் 2,500 கண்டெய்னர்களுடன் பயணித்த நிலையில் தண்ணீரில் மூழ்கியது.

இதனை சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் உறுதி செய்துள்ளது. ”ஜிஎஃப்எஸ் பிரைப் கட்டல் சேதமடைந்து தீப்பிடித்ததை தொடர்ந்து மூழ்கி உள்ளது. கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இன்னொரு சம்பவத்தில் ஆண்டிகுவா – பார்புடா நாட்டு கொடியுடன் சென்ற ‘Cape Dao’ கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தி அருகில் மூழ்கியது. இதில் ஒரு பணியாளர் இறந்த நிலையில் மற்றவர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். கடந்த மாதம் 23ம் தேதி இந்த கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டு இருந்தது. அந்த தாக்குதலில் தப்பிய இந்த கப்பல் தற்போது நீரில் மூழ்கி உள்ளது. இதனால் தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *