ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: ட்ரம்ப் அறிவித்த Project Freedom திட்டம்|Trump’s Project Freedom Targets Hormuz Ship Rescue

Spread the love

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, ஈரான் போர் தொடங்கியது. அன்றிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது ஈரான். அதனால், அப்போதிருந்து எண்ணெய் உள்ளிட்ட பல சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வாயிலில் நிற்கின்றன.

இந்தக் கப்பலுக்கு வழிகாட்டும் வகையில், அமெரிக்க அதிபர் “Project Freedom’ என்கிற திட்டத்தை அறிவித்துள்ளார்.

அந்தத் திட்டம் குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“மத்தியக் கிழக்கில் தற்போது நடந்து வரும் மோதலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத உலக நாடுகள் பல அமெரிக்காவிடம் ஒரு உதவியைக் கோரியுள்ளன.

ட்ரம்ப்

ட்ரம்ப்
White House

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள தங்கள் கப்பல்களை மீட்க உதவுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாடுகளுக்கும் இந்தச் சண்டைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் வெறும் அப்பாவிப் பார்வையாளர்கள் மட்டுமே!

ஈரான், மத்தியக் கிழக்கு மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, அந்த நாடுகளின் கப்பல்களைப் பாதுகாப்பாக வழிநடத்தி வெளியே கொண்டுவர நாங்கள் சம்மதித்துள்ளோம்.

இதன் மூலம் அவர்கள் சுதந்திரமாகத் தங்கள் வணிகத்தைத் தொடர முடியும். மீண்டும் சொல்கிறேன், இந்தப் பகுதியில் இப்போது நடக்கும் விஷயங்களுக்கும் அந்தக் கப்பல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *