ஹார்முஸ் நெருக்கடி: பிரென்ட் கச்சா எண்ணெய் 125 டாலரா?|Crude Oil Shock: Brent Could Climb to $125

Spread the love

2022-ம் ஆண்டிற்குப் பிறகு, இன்றுதான் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 120 டாலரையொட்டி வர்த்தகமாகி வருகிறது.

“இது இப்படியே தொடருமா… இன்னும் எத்தனை டாலர் வரை செல்லும்?’ போன்ற கேள்விகள் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

கச்சா எண்ணெய்யின் தாறுமாறு ஏற்றத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடலே மிக முக்கிய காரணம். அதன் பின், ஈரான் தங்கள் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துள்ளன.

இதனாலும், கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றங்கள் இருக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி

ஹார்முஸ் ஜலசந்தி

ஈரான் போர் முடிந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் இப்போதிருந்து வரும் பிரச்னை முழுவதும் முடியும் வரை, கச்சா எண்ணெய்யில் இந்த நிலையற்றத் தன்மையும், உச்சங்களும் தொடரும்.

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, “இப்போதிருக்கும் சூழலில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 125 டாலர் வரைக்கூடச் செல்லலாம்.

மேலும், கச்சா எண்ணெய்யில் அதிக நிலையற்றத் தன்மை நிலவும். இதனால், ஈரான் போர் முடியும் வரை, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய்யில் டிரேட் செய்வது சிறந்த ஆப்ஷன்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *