“ஹீரோவாக ஏற்றபின், வில்லன் கேரக்டர் ஏன் என யோசிக்கிறேன்.!”- சிவகார்த்திகேயன் | shivakarthikeyan about his first movie chance and villain charecter

Spread the love

சென்னையில் நடந்த செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று (அக்.25) நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டிருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஆங்கிரிங் பண்ணும்போது எந்த கவலையும், பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதுதான் எனக்கு சினிமாவில் ரசிகர்களை கொடுத்தது.

என் மீது காசு போட்டு படம் எடுக்கலாம் என்று தயாரிப்பாளர்களை உருவாக்கியது. அதை மறக்கவே மாட்டேன். நான் டிவியில் இருந்தபோது சினிமா பண்ண வேண்டும் என்று பலர் சொன்னார்கள்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அப்போது பசங்க பட இயக்குநர் பாண்டியராஜ் படம் பண்ண இருந்தார். நான் ஆடிசன் போனேன். மறுநாளே உங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது. மெரினா வந்திடுங்கள் என்றார்.

எனக்கு பயம், சந்தேகம் இருந்தது. அதனால், பட போஸ்டர் வரும் வரை அந்த படம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. ஒருநாள் என் பட போஸ்டர் வந்தபோது என் அம்மா கேட்டார்.

ஆமாம், படம் பண்ணுகிறேன் என்று சொன்னேன். உன் மனைவிக்கு தெரியுமா? என்று கேட்டார். இன்னும் சொல்லவில்லை என்றேன். அப்படி தான் அந்தப் படத்தில் நடித்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *