வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன | Ecuador Newborn Baby With a Thick Moustache Goes Viral.. What’s the Real Story?

Spread the love

International

oi-Hema Vandhana

குய்டோ: ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான மீசை இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி வருகிறது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைக்கு இப்படி ஒரு மீசையா என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ உண்மையானதா அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவாக, குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவர்களின் உடலில் மென்மையான முடிகள் வளரத் தொடங்கும். இந்த முடிகளுக்கு “லானுகோ” (Lanugo) என்று பெயர்.

Ecuador Viral Video Newborn Baby

குழந்தையின் முதுகு, தோள்கள், காதுகள், முகம் போன்ற பகுதிகளில் இந்த மென்மையான, மெல்லிய முடிகள் காணப்படும்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த முடிகள் பிறந்த பிறகு சில நாட்கள் அல்லது வாரங்களில் படிப்படியாக மறைந்துவிடும்.

பிறந்த குழந்தைக்கு மீசை எப்படி?

ஆனால், பெரியவர்களுக்கு இருப்பது போலவே அடர்த்தியான மீசையுடன் எந்த குழந்தையும் பிறந்ததில்லை.. .. ஈக்வடார் நாட்டில் பச்சிளம் குழந்தை ஒன்று அடர்ந்த மீசையுடன் பிறந்து பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தையின் முகத்தில், அடர்ந்த மீசை இருப்பது பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது.. இந்த குழந்தையை பார்த்த நெட்டிசன்கள் வயிறு குலுங்க சிரித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பெரிய மனுஷன் போல மீசை

“இவன் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடியே, மெச்சூரிட்டியா இருக்கானே… பிறக்கும்போதே கல்யாணம் ஆகி, கடன் வாங்கி நொந்து போனவன் போல இருக்கானே? குடும்ப பொறுப்புகளையும் கடன் சுமைகளையும் சுமக்கும் பெரிய மனுஷன் போல இருக்கிறானே” என்றெல்லாம் ஜாலியாக கிண்டல் செய்கிறார்கள்.

சிலர், இந்த மீசை குழந்தையை வைத்து விதவிதமான போட்டோக்களையும், மீம்களையும் சோசியல் மீடியாவில் பறக்கவிட்டு வருகிறார்கள். மிலிட்டரி டிரஸ் அணிந்தவர் போலவும், பெரிய தொழிலதிபர் போலவும், குழந்தையின் தோற்றத்தை மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

போட்டு உடைத்த நிபுணர்கள்

ஆனால், இந்த வைரல் வீடியோவை நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து, இது முற்றிலும் எடிட் செய்யப்பட்ட போலி வீடியோ என்பதை போட்டு உடைத்துவிட்டார்கள்.

ஏனென்றால், இந்த வீடியோவில் குழந்தை தலையை அசைக்கும்போது மீசை மட்டும் அசையாமல் தனியாக நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தையின் முகத்தில் படும் வெளிச்சமும் மீசையின் மீது படும் வெளிச்சமும் வேறு மாதிரியாக தெரிவதால், இதை யாரோ எடிட் செய்திருக்கலாம் என்கிறார்கள்.

ஏஐ வீடியோ?

கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாகவே ஒருவரின் முகத்தில் மீசை, தாடியை மிக துல்லியமாக மாற்ற முடியும். அதுபோல இந்தக் குழந்தையின் முகத்திலும் ஏஐ மூலம் மீசையை டிசைன் செய்திருக்கலாம் என்கிறார்கள்.

ஆனாலும், இந்த வீடியோ நூற்றுக்கு நூறு பொய் என்று நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அதேசமயம், இதுபோல் ஒரு குழந்தை பிறந்ததாக எந்த மருத்துவமனையோ அல்லது குடும்பத்தினரோ இதுவரை எந்தத் தகவலும் சொல்லவில்லை. எனவே, இது நிஜமான வீடியோவா? எடிட்டிங் வேலையா? என்ற குழப்பம் இணையத்தில் 3வது நாட்களாக இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது..!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *