எண்ணெய் தட்டுப்பாடு குறுகிய காலம் (3 மாதம் முதல் ஒரு வருடம் வரை) நீடித்தால்: இந்தச் சூழ்நிலையில், ரூபாய் மதிப்பு இப்போது குறையும்.
ஆனால், எண்ணெய் இறக்குமதிச் செலவு குறைந்து, இந்த மலிவான ரூபாய் மதிப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கி வரும்போது, ரூபாய் மதிப்பு மீண்டும் கணிசமாக மீண்டெழுந்துவிடும்.
எண்ணெய் தட்டுப்பாடு நீண்ட காலம் (ஒரு வருடம் அல்லது அதற்கு மேல்) நீடித்தால்: ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை அனுமதிப்பதைத் தவிர வேறு எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அது நஷ்டத்தில்தான் முடியும்.
அதைவிடுத்து, ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க முயற்சி செய்தால், நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு முற்றிலும் கரையும் வரை தொடர்ந்து வீணாகிக் கொண்டேதான் இருக்கும்.
மேலும், டாலர் அடிப்படையிலான பாண்டுகளோ அல்லது அதிக வட்டி தரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் டாலர் டெபாசிட்டுகளோ தற்காலிகமாகப் போடும் ஒரு ஒட்டுத் துணியாக (band-aid) மட்டுமே இருக்க முடியுமே தவிர நிரந்தரத் தீர்வாகாது.
எப்போதாக இருந்தாலும், ஒரு டாலருக்கு 100 ரூபாய் என்ற அந்த உளவியல் தடையை நீங்கள் கடந்துதான் ஆக வேண்டும்.