உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘Grand Theft Auto VI’ (GTA 6) வீடியோ கேம், வெளியீட்டு நாளிலேயே வருவாயில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தை ஆய்வு நிறுவனமான Sensor Tower வெளியிட்ட மதிப்பீட்டின்படி, GTA 6 இதுவரை சுமார் 1.84 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹16,500 கோடி) வருவாயை ஈட்டியுள்ளது. மொத்தம் 1.905 கோடி பிரதிகள் விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருவாய், கடந்த ஜூலை மாதம் வெளியான ‘The Odyssey’ திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலான 1.805 பில்லியன் டாலரையும் முந்தியுள்ளது. இதன் மூலம் ஒரு வீடியோ கேம், உலகளாவிய திரைப்பட வசூலை மிஞ்சும் அளவுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, GTA 6-ன் மொத்த வருவாயில் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முன்பதிவுகள் மூலமாகவே கிடைத்துள்ளதாக Sensor Tower மதிப்பிட்டுள்ளது. மேலும், விற்பனையில் சுமார் 75 சதவீதம் PlayStation பதிப்பையும், மீதமுள்ள 25 சதவீதம் Xbox பதிப்பையும் சார்ந்துள்ளது.

GTA தொடரை வெளியிடும் Rockstar Games நிறுவனத்தின் தாய் நிறுவனமான Take-Two Interactive, முன்பதிவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த வாரம் வெளியிட்ட நிதி அறிக்கையில், முன்பதிவுகள் தங்களது ஆரம்ப எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வெளியீட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஒரு பில்லியன் டாலர் வருவாய் எல்லையைக் கடந்த GTA 6, இனி எந்த அளவுக்குச் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு கேமிங் உலகில் அதிகரித்துள்ளது.