“வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து பல நாட்கள் மௌனம் காத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்”/Kolathur mla v.s babu death at chennai

Spread the love

ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முடியாமல் போய்விட்டது. அவர் அனுமதிக்கப்பட்டுச் சில தினங்களிலேயே ஆபத்தான நிலையில் இருப்பதாகச் செய்திகள் வந்தன. எனினும், முழு விவரம் எதுவும் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலிருந்தும் வெளிவரவில்லை, அரசின் சார்பாகவும் வெளியிடப்படவில்லை.

அந்தச் சூழ்நிலையில்தான் வி.எஸ்.பாபு அவர்களுடைய உடல்நிலை குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, நாம் கடந்த 07.10.2026 ஆம் தேதியன்று அறிக்கை கொடுத்திருந்தோம்.

டாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

அதற்குப் பின்னரும் அரசின் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. இப்பொழுது அவருடைய மரணச் செய்தி மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு கொளத்தூர் தொகுதி மக்களுக்காகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சில மாதங்கள் கூடப் பணியாற்ற முடியாமல் மரணமெய்திவிட்டார்.

அவர் மக்களுடைய பிரதிநிதி. அவருடைய உடல்நிலை குறித்து இந்த மூன்று மாதங்கள் மருத்துவமனையோ அல்லது அரசோ மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதையே ஒரு மனித உரிமை மீறலாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

அவருடைய மரணத்தால் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய இயக்கத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *