10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி | dindigul Woman arrested for practicing medicine only completing 10th grade

Spread the love

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் பாரதி தலைமையில் நத்தம் வட்டார மருத்துவ அலுவர் அஜாம் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செந்துறை பேருந்து நிலையம் பகுதியில் ஒருவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. அங்கு சென்று விசாரணை செய்த போது அவரது பெயர் பாப்பாத்தி (55) என்பதும் 10-ஆம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நத்ததில் போலி மருத்துவர் கைது

நத்ததில் போலி மருத்துவர் கைது

அவரைக் கைது செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டனர். நத்தம் பகுதியில் போலி மருத்துவர்கள் அதிகம் இருப்பதாகவும் இது தொடர்பாக நத்தம் பகுதி முழுவதும் உள்ள கிளினிக்குளைச் சோதனை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *