“100 நாள் ஆட்சியில், 6 காவல்நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை”- சீமான் கண்டனம்| ntk seeman slams tvk government for lockup deaths

Spread the love

“100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச்சேர்ந்த ஐயா பரமசிவம் அவர்களை, விசாரணை என்ற பெயரில் சிந்தாமணி காவல் நிலையத்தில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

100 நாள் ஆட்சியில் அடுத்தடுத்து நடைபெறும் காவல்நிலைய மரணங்களை தடுக்கத்தவறி தவெக அரசு வேடிக்கைப்பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

lockup death - சிறைச்சாலை மரணம்

lockup death – சிறைச்சாலை மரணம்

காவல்துறையினரின் கண்மூடித்தனமானத் தாக்குதலில் படுகாயமடைந்து, தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் ஐயா பரமசிவம் அவர்கள், அளித்துள்ள மரண வாக்குமூலக் காணொளி இதயத்தை உறையச்செய்கிறது.

வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்னையில், தன்னுடைய மனைவி அய்யம்மாளுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற ஐயா பரமசிவத்தை, காவல் நிலையத்திற்குள் வைத்தே கடுமையாகத் தாக்கிய சிந்தாமணி காவல்துறையினர், தாக்குதல் குறித்து வெளியில் சொன்னால் கஞ்சா வழக்கில் குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும், ஐயா பரமசிவத்தை மிரட்டியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை.

தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்தின் சுவடு மறைவதற்குள் அடுத்தடுத்து நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *