புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்ட அரசுப் பள்ளி கட்டிடங்க சேதங்கள், தேவைகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களில் சேதம் இருப்பது உறுதியாகி உள்ளது.
வகுப்பறை, சமையலறை, கழிவறை, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி போன்றவை பல பள்ளிகளுக்குத் தேவையாக உள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து அவை தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த பள்ளிகளின் கட்டிடங்கள், சுற்றுசுவர்கள், கழிவறை, சமையலறை ஆகியவற்றை குறுகிய காலத்தில் கட்டி முடிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபகள் பிறப்பித்த உத்தரவில், “12 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.