1,414 கோடி சொத்து முதல் திகார் சிறை வரை – டி.கே. சிவக்குமாரின் அரசியல் கிராஃப் | D.K. Shivakumar karnataka deputy cm political journey

Spread the love

காங்கிரஸின் “அல்டிமேட் ட்ரபிள்ஷூட்டர்’!

டி.கே. சிவக்குமாரின் அரசியல் கரியரில் எது ரொம்பவே ஸ்பெஷல் என்று கேட்டால், அது சந்தேகமே இல்லாமல் அவருடைய ‘ட்ரபிள்ஷூட்டர்’ அவதாரம்தான் என்கிறார்கள் கர்நாடக காங்கிரஸ் காரர்கள்.

கட்சிக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் மீட்பராகக் களமிறங்குவதுதான் இவரது ஸ்டைல். 2017-ல் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் இழுப்பதைத் தடுக்க, அவர்களை பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைத்து அகமது பட்டேலின் மாநிலங்களவை வெற்றியை உறுதி செய்தது ஆகட்டும், மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியைக் காப்பாற்ற உதவியது ஆகட்டும், டி.கே.எஸ்ஸின்ன் இந்த வியூகம்தான் அவரை காங்கிரஸ் மேலிடத்தின் குட் புக்கில் நிரந்தரமாக இடம்பெறச் செய்தது.

2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இருந்து உழைத்த மாஸ்டர் மைண்ட் இவர்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சித்தராமையா - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா – டி.கே.சிவக்குமார்

ரூ.1,414 கோடி சொத்து

சரி, இப்போது டி.கே.எஸ்ஸி்ன் சொத்து மதிப்புக்கு வருவோம். 2023 தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, இவரின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1,414 கோடி ரூபாய்!

இதில் அசையும் சொத்துக்கள் 244 கோடி ரூபாய், அசையா சொத்துக்கள் 1,170 கோடி ரூபாய். பெங்களூரு, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள், விவசாய நிலங்கள், சுரங்கத் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள பங்குகள் என இவரது சொத்து மதிப்பு பட்டியல் நீள்கிறது.

ஆனால், இந்த சொத்துக்கள் எப்படி வந்தன என்பதுதான் எதிர்க்கட்சிகள் வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், சிவக்குமாரோ, தனது சொத்துக்கள் அனைத்தும் பரம்பரை பரம்பரையாக வந்தவை மற்றும் தனது கடின உழைப்பால் சம்பாதித்தவை, எல்லாவற்றிற்கும் முறையான கணக்கு உள்ளது என்று அடித்துச் சொல்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *