`144 தடை' – திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வளைத்த காவல்துறை; நாளைவரை நீடிக்கும் தடை உத்தரவு!

Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை முன்னிட்டு, இன்று நடைபெற உள்ள தீபத் திருவிழாவை ஒட்டி அப்பகுதி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 132 காவல் ஆய்வாளர்கள் உட்பட மொத்தம் 5,618 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நேற்று (23/11/2026) இரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தடை உத்தரவு, நாளை (25-ஆம் தேதி) காலை 10 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

இந்தத் தடை உத்தரவின் காரணமாக, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் திருப்பரங்குன்றத்திற்குள் நுழையக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்ட எல்லை முழுவதும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் ஓரிடத்தில் அதிகப்படியாகக் கூடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *