International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அந்த பெண்ணுக்கு வயது 19. இளம் வயதில் காதலிலும் விழுந்தார். காதலனுடன் காட்டிய நெருக்கம் கர்ப்பமானார். கர்ப்பத்தை மறைக்க வேண்டாம். பெற்றோரிடம் சொல்லி காதலனை திருமணம் செய்யலாம் என்று நினைத்தார் அந்த இளம்பெண். ஆனால் இந்த முடிவே அவரது வாழ்க்கையை முடித்துவிட்டது. ஆம், அவரது பெற்றோரே கொடூரமாக ஆணவக்கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஈரானில் நடந்துள்ளது. ஈரான் நாட்டின் மேற்கு பகுதியில் சனந்தாஜ் என்ற நகரில் வசித்து வருபவர் வோரியா ஃபத்தாஹி. இவரது மனைவி பெர் லெய்லா வெய்ஸ். இந்த தம்பதியின் மகள் ஹெலியா ஃபத்தாஹி. இவருக்கு வயது 19.
ஹெலியா ஃபத்தாஹிக்கு இளளைஞர்ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதோடு அவர்கள் 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் ஹெலியா ஃபத்தாஹி கர்ப்பமானார். திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானதால் அவர் அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வது என்பது தெரியவில்லை. இதனால் சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறிவிடலாம் என நினைத்தார்.
அதன்படி தனது பெற்றோரான வோரியா ஃபத்தாஹி – லெய்லாவெய்ஸ் ஆகியோரிடம் கூறினார். அதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதோடு மகள் ஹெலியா ஃபத்தாஹியை கொடூரமாக தாக்கினர். மேலும் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் மானம், மரியாதை போய் விடும் என நினைத்த பெற்றோர், மகளை கொல்ல முடிவெடுத்தனர்.
இதையடுத்து இருவரும், வலிப்புக்கான மாத்திரை சுமார் 30தை எடுத்து ஹெலியா ஃபத்தாஹிக்கு விழுங்க செய்து கொல்ல நினைத்தனர். ஆனால் ஹெலியா ஃபத்தாஹி இறக்கவில்லை. இதனால் அவரை மீண்டும் அடித்து துன்புறுத்தி தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சை நிறுத்தினர். இதில் துடிதுடித்து ஹெலியா ஃபத்தாஹி இறந்தார்.இதையடுத்து மகளை ஆணவக்கொலை செய்தததாக கூறி போலீசார் வோரியா ஃபத்தாஹி – லெய்லா வெய்ஸ் தம்பதியை கைது செய்தனர்.