
இதுகுறித்து ஜே.ஆர்.லக்ஷ்மிதாவின் அம்மா ரூபா கூறுகையில், “என் மகள் ஜே.ஆர்.லக்ஷ்மிதா குழந்தையாக இருக்கும்போதே அவளுக்கு டாய்ஸ் வைத்து விளையாடுவது பிடிக்கும். ஃப்ரூட்ஸ், அனிமல்ஸ் டாய்ஸை ஒருமுறை காண்பித்து பெயர்களைச் சொல்லிக் கொடுத்தால், அதைப் புரிந்துகொண்டு மறுபடியும் கேட்டால் சரியாகச் சொல்வாள். ‘அந்த ஆப்பிளை எடு’ எனச் சொன்னால் சரியாக ஆப்பிளை எடுத்துத் தருவாள். அவளது நினைவாற்றலை சாதனையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன். அதன் பிறகு பிளாஷ் கார்ட்ஸ் வைத்து சொல்லிக் கொடுத்தேன். அதை நினைவு வைத்து சொல்லியதில், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்.

அடுத்த கட்டமாக கொஞ்சம் பெரிய அளவில் சாதனை புரிய வைக்க வேண்டும் என வேர்ல்ட் ரெக்கார்டுக்கு பயிற்சி அளித்தேன். 2 நிமிடங்கள் 40 வினாடிகளில் 195 நாடுகளின் தேசியக் கொடிகளின் பெயர்களைக் கூறி இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார். ஜே.ஆர்.லக்ஷ்மிதா இப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருக்கிறார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், குமரி கலெக்டர் பிரதாப் உள்ளிட்டோர் எங்கள் மகளை பாராட்டினர். எங்களுக்கு இரண்டாவது மகள் பிறந்திருக்கிறார். அந்தக் குழந்தையையும் சாதனை செய்ய வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்” என்றார்.