மகாராஷ்டிரா: ஆண் குழந்தை இல்லாததால் மனைவி மீது சந்தேகம்; பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கணவர் | mumbai Husband Pours Acid on Wife’s Private Parts

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடத்தில் வசிப்பவர் சுக்காராம். வெல்டராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தி வந்தார்.

கடந்த மாதம் 20ம் தேதி சுக்காராம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் ஏற்கனவே இருந்த பிரச்னையில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. இதில் வீட்டைச் சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து தனது மனைவியின் பிறப்புறுப்பில் சுக்காராம் ஊற்றினார். அதோடு இது குறித்து வெளியில் சொன்னால் கடும் விளைவு ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

தன்னை மருத்துவனைக்கு அழைத்து செல்லும்படி சுக்காராமிடம் அவரது மனைவி கேட்டுக்கொண்டார். ஆனால் சுக்காராம் தனது மனைவியைச் சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. அதோடு தனது மனைவியும் தனியாகச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை. 

இது குறித்து போலீஸில் அல்லது வேறு யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி மிரட்டி இருந்தார். சமீபத்தில் அப்பெண் சோலாப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது தனது கணவன் செய்த கொடுமைகள் குறித்து சொல்லி அழுதுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த தைரியத்தில் மீண்டும் உருளிக்கு வந்து தனது கனவருக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில், ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்கவில்லை என்ற கோபத்திலும், வீட்டிற்கு வெளியில் செல்லும் போது வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து இருக்கிறாய் என்று கேட்டு அடிக்கடி அடித்து உதைத்துள்ளார்.

சம்பவத்தன்று சுக்காராம் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது மனைவியை அடித்து உதைத்து ஆசிட்டை மனைவியிம் பிறப்புறுப்பில் ஊற்றினார். இதனால் சுக்காராம் மனைவி வலி தாங்க முடியாமல் கத்தி இருக்கிறார். அதோடு வீட்டை விட்டு வெளியில் ஓடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் முயன்றார். ஆனால் சுக்காராம் தனது மனைவியை தனி அறையில் அடைத்து கதவைப் பூட்டிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *