“2 நாட்களில் 9 கொலைகள் – என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?”- உதயநிதி ஸ்டாலின் கண்டனம் | udhayanidhi slams tvk government for crime issues

Spread the love

தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *