யாரெல்லாம் இந்தப் பயிற்சியில் சேரலாம்?
* பிளஸ் டூ முடித்தவர்கள் அல்லது 10-ம் வகுப்பு முடித்து 3 ஆண்டுகள் டிப்ளமோ படித்தவர்கள்
* பிளஸ்டூ முடித்து 2 ஆண்டுகள் டிப்ளமோ படித்தவர்கள்
* கல்லூரியில் இருந்து இடைநின்றவர்கள்.
* வயது 18 முதல் 21 வரை இருக்க வேண்டும்
* குடும்ப வருமானம் மாதம் ரூ.20,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்
* பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* ஏப்ரல் 2026-ல் பிளஸ்டூ முடிக்கும் மாணவர்களும் இந்தத் திட்டத்தில் சேரமுடியாது.
தமிழ் மீடியம் படித்தவர்கள், அரசுப்பள்ளியில் படித்தவர்கள், முதல் தலைமுறையாக பிளஸ்டூவைத் தொட்டவர்கள், பெண்களுக்கு இந்தப் பயிற்சியில் முன்னுரிமை தரப்படும். இந்தாண்டு 90 மாணவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள்.
இந்த ஓராண்டு பயிற்சி 100% இலவசம். தொழில்துறையின் தேவைக்கேற்ப ஏற்ப இந்தப் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னை, பெருங்குடியில் உள்ள Freshworks STS Software Academy-யில் இந்தப் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 10,000 உதவித்கொகை வழங்கப்படும். மூன்று வேளை உணவும் பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும்.
பயிற்சி பெறும் காலமான 12 மாதங்களும் பயன்படுத்தும்படியாக நவீன லேப்டாப்பை பயிற்சி நிறுவனமே வழங்கும். பயிற்சி பெறும் காலத்தில் UDEMY நிறுவத்தில் கூடுதலாக கோர்ஸ் படிக்க விரும்பினால் அதற்கான செலவையும் பயிற்சி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். பயிற்சியின் இறுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் மற்றும் Freshworks நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
60-க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தப் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களை வளாகத் தேர்வு மூலம் தேர்வு செய்து இன்டர்ன்ஷிப் மற்றும் பணி வாய்ப்புகள் வழங்குகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள் 5.5.2026
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : https://myfssa.freshworks.com
தொடர்பு கொள்ள: 8122424904
இ-மெயில் முகவரி : admissions@fssa.freshworks.com
ஆர்வமுள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்!