Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: 2015ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மைக் ஹசியை அப்போதைய இந்திய கேப்டன் தோனி பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் அது பிசிசிஐ நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன்பின் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் மைக் ஹசியை தோனி கொண்டு வந்திருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி புதிய பயிற்சியாளராக மைக் ஹசியை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆடம் வோஜஸ் தொடங்கி மெக்கல்லம் வரை பலரின் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் ஏற்கனவே தோனியுடன் இணைந்து செயல்பட்டவர் என்றும் சில தகவல் தெரிய வந்திருக்கிறது.
இதனால் பிரன்டன் மெக்கல்லம், கேரி கிர்ஸ்டன், கெப்லர் வெசல்ஸ், டங்கன் ஃபிளட்சர் ஆகியோரில் யாரேனும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனி 2015ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆச்திரேலியா ஜாம்பவான் மைக் ஹசியை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.
2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக மைக் ஹசி விளையாடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2013ல் ஓய்வு பெற்றார். இதன்பின் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசியை தோனி அணிக்குள் கொண்டு வந்தார். அந்த உறவு இப்போது வரை தொடர்ந்து வருகிறது. மைக் ஹசி மீதான தோனியின் நம்பிக்கையும் உச்சத்திலேயே இருக்கிறது.
இதனால் மைக் ஹசிக்கு புரமோஷன் கொடுக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டு வரப்படுவார் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப அவர் இன்னும் பிளமிங் அழைத்து போதும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செல்லவில்லை. இதனால் மைக் ஹசியின் பெயரை தோனி டிக் செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது.