2016-ல் ரூ.1 லட்சத்திற்கு 4 பவுனுக்கு மேல் தங்கம்; 2016-2025 அட்சய திருதியை தங்கம் விலை ஒரு பார்வை!

Spread the love

வரும் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), அட்சய திருதியை.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், பணம் சேரும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. இதனால், அட்சய திருதியை அன்று ஒரு பொட்டு தங்கமாவது இந்தியர்கள் வாங்குவார்கள்… அல்லது வாங்க முயற்சிப்பார்கள்.

ஆனால், இப்போது… இன்றைய தங்கம் விலையில் அந்த ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

தங்கம்
தங்கம்

ஆம்… இன்றைய விலை நிலவரத்தின் படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,210. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,13,680.

ஆக, கடந்த 10 ஆண்டுகளில் அட்சய திருதியை அன்று தங்கம் விலை என்னவாக இருந்தது… இப்போது எவ்வளவு சதவிகிதம் விலை உயர்ந்திருக்கிறது என்று ஒரு பார்வை பார்க்கலாம்.

2016-ம் ஆண்டு அட்சய திருதியில் இருந்து இப்போது வரை சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் பார்ப்போம்.

தேதி – ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) – ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) – ஒரு கிராம் வெள்ளி விலை

மே 9, 2016 – ரூ.2,843 – ரூ.22,744 – ரூ.44.50

ஏப்ரல் 28, 2017 – ரூ.2,778 – ரூ.22,224 – ரூ.43.20

ஏப்ரல் 18, 2018 – ரூ.2,992 – ரூ.23,936 – ரூ.42.50

மே 7, 2019 – ரூ.3,022 – ரூ.24,176 – ரூ.40.20

ஏப்ரல் 26, 2020 – ரூ.4,509 – ரூ.36,072 – ரூ.46.10

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

மே 14, 2021 – ரூ.4,507 – ரூ.36,056 – ரூ.75.50

மே 3, 2022 – ரூ.4,796 – ரூ.38,368 – ரூ.67.20

ஏப்ரல் 22, 2023 – ரூ.5,605 – ரூ.44,840 – ரூ.80.40

மே 10, 2024 – ரூ.6,770 – ரூ.54,160 – ரூ.91.20

ஏப்ரல் 30, 2025 – ரூ.8,980 – ரூ.71,840 – ரூ.111

2016-ம் ஆண்டை விட, 2017-ம் ஆண்டில்

தங்கம் விலை: 2.29 சதவிகிதம் சரிவு

வெள்ளி விலை: 2.92 சதவிகிதம் சரிவு

2017-ம் ஆண்டை விட, 2018-ம் ஆண்டில்

தங்கம் விலை: 7.70 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 1.62 சதவிகிதம் சரிவு

2018-ம் ஆண்டை விட, 2019-ம் ஆண்டில்

தங்கம் விலை: 1 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 5.41 சதவிகிதம் சரிவு

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

2019-ம் ஆண்டை விட, 2020-ம் ஆண்டில்

தங்கம் விலை: 49.21 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 14.68 சதவிகிதம் ஏற்றம்

2020-ம் ஆண்டை விட, 2021-ம் ஆண்டில்

தங்கம் விலை: 0.04 சதவிகிதம் சரிவு

வெள்ளி விலை: 63.77 சதவிகிதம் ஏற்றம்

2021-ம் ஆண்டை விட, 2022-ம் ஆண்டில்

தங்கம் விலை: 6.41 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 10.99 சதவிகிதம் சரிவு

2022-ம் ஆண்டை விட, 2023-ம் ஆண்டில்

தங்கம் விலை: 16.87 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 19.64 சதவிகிதம் ஏற்றம்

2023-ம் ஆண்டை விட, 2024-ம் ஆண்டில்

தங்கம் விலை: 20.79 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 13.43 சதவிகிதம் ஏற்றம்

2024-ம் ஆண்டை விட, 2025-ம் ஆண்டில்

தங்கம் விலை: 32.64 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 21.71 சதவிகிதம் ஏற்றம்

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

2025-ம் ஆண்டை விட, இன்றைய தங்கம், வெள்ளி கணக்கில்

தங்கம் விலை: 58.24 சதவிகிதம் ஏற்றம்

வெள்ளி விலை: 147.75 சதவிகிதம் ஏற்றம்

இந்த 10 ஆண்டுகளில் இது தங்கம் மற்றும் வெள்ளியின் வளர்ச்சி. இந்தக் கணக்கைப் பார்த்தல் 2025-ம் ஆண்டில் தான் தங்கம் மற்றும் வெள்ளி விலை அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.

2016-ம் ஆண்டு, ரூ.1 லட்சத்திற்கு 35.17 கிராம் தங்கமும், 4.40 பவுன் தங்கமும் வாங்கியிருக்கலாம்.

ஆனால், இப்போது நிலை என்ன என்பது நமக்கே தெரியும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *