2027 உலகக்கோப்பை.. இந்திய பிளேயிங் XIல் குல்தீப் யாதவ் வேண்டாம்.. கங்குலி தேர்வு செய்த அணி! | Sourav Ganguly predicts the India Playing XI for the ICC Cricket World Cup 2027 without Kuldeep Yadav

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமைய வேண்டும் என்று இந்திய ஜாம்பவான் சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் 3 ஆல் ரவுண்டர்கள், 5 பேட்ஸ்மேன்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக குல்தீப் யாதவ் அந்த அணியில் இடம்பெறவில்லை.

2027ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடக்கவுள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 57 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. லீக் போட்டிகள், சூப்பர் 6, அரையிறுதி, இறுதிப் போட்டி என்று 2 மாதங்கள் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடக்க இருக்கிறது.

World Cup 2027

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, அக்டோபர் 10ஆம் தேதி நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உலகக்கோப்பை நடத்தப்பட உள்ளது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமைய வேண்டும் என்று சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.

கங்குலி தேர்வு செய்த அணியின் படி தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருக்கின்றனர். அதேபோல் 3வது இடத்தில் விராட் கோலியும், 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், 5வது இடத்தில் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நம்பர் 6 வரிசையில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்துள்ளார். மீண்டும் 7வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனின் தேவை இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து நம்பர் 8ல் அக்சர் படேலையும், 3 வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா, பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணிக்கு கட்டாயம் நீண்ட பேட்டிங் வரிசை தேவை என்று கங்குலி கூறியுள்ளார்.

கங்குலி தேர்வு செய்த அணியில் 5 பேட்ஸ்மேன்கள், 3 ஆல்ரவுண்டர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அதேபோல் ஹர்திக் பாண்டியா இருப்பதால், 4வது வேகப்பந்துவீச்சாளரின் இடத்தை நிரப்ப முடியும். இரு ஸ்பின்னர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தரை சேர்க்கிறார். ஆனால் குல்தீப் யாதவ் பெயர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *