21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனைக்கு டாஸ்மாக் தடை|No Alcohol for Under-21s: TASMAC Issues Strict Order

Spread the love

21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…

“தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003 விதி எண் 11A -ன் படி 21-வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

டாஸ்மாக்

டாஸ்மாக்
கோப்புப் படம்

மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யப்பட வேண்டும்.

மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *