தவெகவின் முக்கிய அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் போன்றோரே தனுஷின் அரசியல் ஆசை குறித்து விமர்சித்து பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு பெரிய ரசிகர் சந்திப்புக்கு தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் இருந்து பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து இந்தச் சந்திப்பை நடத்தவிருக்கிறாராம்.
இதுதொடர்பாக தனுஷுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “‘குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழக்கமாக தலைவர் ரசிகர்களைச் சந்திப்பார். இந்த முறை கொஞ்சம் ஸ்பெசலாக முழுக்க முழுக்க பெண் ரசிகைகளைச் சந்திக்கிறார். தமிழகம் முழுவதுமிருந்து 2500-3000 பெண் ரசிகைகளை நிர்வாகிகள் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறோம்.
நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்துக்காக முதலில் அடையாறு, வடபழனி பகுதிகளில் இடம் பார்த்தோம். சரியாக எந்த இடமும் கிடைக்கவில்லை. அதனால் OMR இல் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் பார்த்திருக்கிறோம். அங்கேதான் நாளை இந்த ரசிகைகள் சந்திப்பு நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தவிருக்கிறோம். தலைவர் சொல்வதைச் செய்கிறோம். எல்லாம் அவர் விருப்பம்” என்கின்றனர்.
தனுஷின் ரசிகைகள் சந்திப்பு நடக்கவிருக்கும் தனியார் கல்லூரி தவெக அமைச்சர் ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது ஹைலைட். உளவுத்துறையினரும் தனுஷின் மூவ்களைக் கவனமாக நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கூட்டணியா(?)