மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார்.
நவம்பர் 10-ஆம் தேதி இந்த நூல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த நூல் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை முதல் முறையாகச் சந்தித்தது குறித்தும் அவர்களது காதல் குறித்தும் பகிந்திருக்கிறார்.

“கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில்தான் எனது காதல் பயணம் தொடங்கியது. இங்கிலாந்தில் உணவு மிகவும் மோசமாக இருந்தது.