நாயகன், தன்னைப் பற்றித் தனக்குள் ஓடும் கேள்விகளுக்கு விடை தேடும் ப29 Review | 29 விமர்சனம்யணமாக இந்தக் கதையைக் காதல், இயல்பான காமெடி மற்றும் சென்டிமென்ட் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
சேலத்திலிருந்து சென்னைக்கு வரும் இளைஞன், நாயகியைப் பார்த்தவுடன் மலரும் காதல், பின்பு நடக்கும் காதல் – கெஞ்சல் – மிஞ்சல்கள் ஆட்டம் என ஒவ்வொரு சாப்டர்களாகப் புரட்டிக் கதையைத் தொடங்குகிறது படம். தொடக்கத்தில் வரும் சாப்டர்கள், காட்சிகளாகக் கோக்கப்பட்ட விதம், அதில் அமைந்திருக்கும் ஹைக்கூ வசனங்கள் புன்னகையுடன் ரசிக்க வைக்கின்றன.
ஆனால், அதற்குப் பிறகான சாப்டர்களின் காதல் கதைகளில் உயிரில்லை. நாயகன், நாயகிக்கு இடையே வரும் மோதல்களுக்குக் காரணம், நம்பிக்கையின்மையா, ‘மிஸ்’ செய்யும் உணர்வா, எதிர்காலம் குறித்த குழப்பங்களா எனத் தெளிவாகச் சொல்லாததால் இடையிலேயே பிரேக் அப் ஆகிறது திரைக்கதை.

இடையிடையே, காதல் பாடத்தின் ‘தீசிஸ்’ கற்றுத் தருவதாக இழுத்….துக் கவித்துவமாக ஒவ்வொன்றையும் விளக்கியிருக்கிறார்கள். அதீத காதல் கவிதை வசனங்களும், சாதாரண விஷயத்துக்குக்கூட உவமையைத் துணைக்கு அழைப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் திகட்டவே செய்கின்றன.
இப்படியான முதல் பாதியின் சாப்டர்கள் பக்கங்கள் தீர்ந்து போக, இரண்டாம் பாதி கதைக்கு வேறொரு புத்தகத்தை எடுத்துப் புரட்டத் தொடங்குகிறார்கள். தான் யாரென்பதைக் கண்டடையும் பகுதிக்கு நகரும் நாயகனின் கதை, முதல் பாதியின் கதைக்குத் தொடர்பே இல்லாமல் நகர்கிறது.
முதல் பாதியிலிருந்து முற்றிலுமாக விலகி, இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்லும் கதைக்கு நகர்ந்திருப்பது குழப்பமூட்டும் எபிசோடே! அதிலிருந்து எங்கெங்கோ கதையின் பக்கம் கூட்டிச் சென்றிருப்பது, வேறொரு படத்திற்கு வந்துவிட்டோமோ என்கிற சந்தேகத்தையும் கொடுக்கிறது.