30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெறும் அரவிந்த் சாமி – ஸ்ரீதேவி படம் | 30 Years Later: Shelved Arvind Swamy-Sridevi Film ‘Anna’ Revived

Spread the love

சமீபத்தில் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது “பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம்.

இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட ‘அன்னா’ என்கிற ஒரு மலையாளப் படத்தின் ‘எவன கதையில்’ என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப் படமும், இந்தப் பாடலும் பெரியளவில் பேசப்பட, கைவிடப்பட்ட அந்த ‘அன்னா’ படத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்கள்.

பிரபல இயக்குநர் ஜோஷி இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் ‘அன்னா’ படம் எடுப்பதாக அப்போது அறிவிப்பு வெளியானது.

ஆனால், அப்படத்தில் தான் நடிப்பதாகக் கமிட் செய்யவில்லை என்பதைச் சமீபத்திய பேட்டியில் அரவிந்த்சாமி தெரியப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்காக 8 பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஆடியோ கேசட்டாகவும் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு காட்சிகூடப் படமாக்கப்படாமல் கைவிடப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *