இதில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ், சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பற்றி சேகர் பாபு மைக்கில் பேசுகையில் அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ராயபுரம் தவெக எம்.எல்.ஏ தாமு, “சீக்கிரம் பேசி முடிங்க. நீங்க பேசுறது போர் அடிக்குது’ என கமெண்ட் அடித்தார். உடனே ஆவேசமான சேகர் பாபு, ‘நான் பேசுறது போர் அடிக்குதா…அப்ப எதுக்கு என்னைய கூப்பிட்டீங்க? ஜனநாயகத்தை மதித்து என்னை அழைத்தீர்கள். நான் வந்தேன். நான் அநாவசியமாக பேசுகிறேனா….நீங்கள் என்னை கூப்பிடாமலேயே இருந்திருக்கலாமே?

நானும் அமைச்சராக இருந்தவன்தான். ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவன்’ என வேகமெடுத்தார். உடனே அமைச்சர் ஆதவ், ‘நீங்கள் பேசுங்கள்…’ என்று கூற, ‘அவரை முதலில் அடக்குங்கள்’ என தாமுவை நோக்கி கூறினார்.
முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவும் மோதிக்கொண்டதால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.