300… 200… 100! மூன்று ஃபார்மேட்… மூன்று மெகா சாதனைகள்! யார் இந்த ஹாரி புரூக்?| harry brook historic 300 200 100 runs records across three cricket formats

Spread the love

டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு வடிவத்திலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மேட்டிலும் ரன்களைக் குவித்து சாதனைகள் படைத்திருப்பவர் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தின் கீக்லியில் பிறந்த ஹாரி புரூக், யார்க்ஷயர் அணியின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர் 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, தனது அதிரடியான பேட்டிங்கால் விரைவிலேயே கவனம் ஈர்த்தார்.

ஹாரி புரூக்

ஹாரி புரூக்

இன்று இங்கிலாந்து அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கும் புரூக், பெரிய ரன்களைக் குவிப்பதிலும் புதிய சாதனைகளைப் படைப்பதிலும் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் முச்சதம்!

2024-ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 322 பந்துகளில் 317 ரன்கள் குவித்தார் ஹாரி புரூக். 310 பந்துகளில் முச்சதத்தை எட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *