தூத்துக்குடி: "தாய் கொலை; கடத்தப்பட்ட மகள்கள்; மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" – அன்புமணி

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – மேரி ரெஜிலா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை இவர்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று குடும்ப உறுப்பினர்களைச் சாராமரியாகத் தாக்கி, பெண் குழந்தைகளை மட்டும் கடத்திச் சென்றிருக்கின்றனர். இதில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும் தந்தையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்தச் சம்பவம் குறித்து அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், அங்கு உறங்கிக் கொண்டிருந்தவர்களை சரமாரியாக வெட்டியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்திருக்கிறார்.

அவரது கணவர் முத்துகிருஷ்ணன், மகன் பிளசெட் ராஜா ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு மகள்கள் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

வீடு புகுந்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுதந்திரமாக உலா வந்து, வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது என்றால் அதை காவல்துறையின் தோல்வியாகத்தான் கருத வேண்டும். இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு அந்தக் குடும்பத்திற்கும், ஞானபிரகாசம் என்பவருக்கும் இடையிலான முன்பகைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இரு தரப்பினரிடையே முன்பகை இருக்கும்பட்சத்தில் அதனால் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்க வேண்டியது உள்ளூர் காவல்துறையின் கடமையாகும்.

அன்புமணி
அன்புமணி

அந்தக் கடமையை காவல்துறை செய்யவில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்து விட்டு, இருவரை அரிவாளால் வெட்டிய கும்பல், இரு பெண் குழந்தைகளையும் கடத்திக் கொண்டு சென்ற கும்பலிடமிருந்து குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கும் போதிலும், கொலையாளிகளை காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை என்பது வருந்தத்தக்கது. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியதுதான் ஓர் அரசு மற்றும் காவல்துறையின் கடமை ஆகும்.

இரவில் உறங்கும்போது கூட ஒரு குடும்பத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்றால் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. சாத்தான்குளம் முதலூரில் நடந்த கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்குக் காரணமான கும்பலை காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *