பிரியதர்ஷனின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரான அபிலாஷ் என்னிடம் வந்து, ‘இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு செட்டிற்கு வந்திருப்பது உங்களுக்குப் பதற்றமாக இருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இல்லை, ஏனென்றால் பிரியதர்ஷனுக்கு என்னை நன்றாகத் தெரியும்.
என்னுடைய சிறந்த மற்றும் மோசமான முகக் கோணங்கள் என்னென்ன, என்னை எப்படித் திரையில் அழகாகக் காட்ட வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்’ என்றேன்.
அப்போது அருகில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரியதர்ஷன் உடனே குறுக்கிட்டு, ‘எனக்கு அவளுடைய சிறந்த மற்றும் மோசமான குணங்களும் கூடத்தான் நன்றாகத் தெரியும்’ என்று கிண்டலடித்தார்.
ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் எனக்கு ஒரு பிக்னிக் ஸ்பாட் போலவும், பழைய நினைவுகளின் சுழலாகவும் இருந்தது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

விவாகரத்திற்குப் பிறகு, பிரியதர்ஷனும் லிசியும் மீண்டும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைச் சமீபத்தில் அளித்த பேட்டியிலும் இயக்குநர் பிரியதர்ஷன் உறுதிப்படுத்தியிருந்தார்.