சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்குடி அரசு மருத்துவமனையில் நான்காவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வறுமையில் வாடும் இந்த குடும்பத்தை நோட்டமிட்ட ஒரு கும்பல், மருத்துவமனையிலேயே லட்சுமியிடம், “ஏற்கெனவே மூணு பெண் குழந்தைங்க இருக்கு… வறுமையில நாலாவது குழந்தையை எப்படி வளர்க்கப் போறீங்க? பேசாமல் வித்துடலாம்” என ஆசைவார்த்தை கூறி, மூளைச்சலவை செய்துள்ளது. ஆரம்பத்தில் லட்சுமி இதற்கு மறுத்ததாகக் கூறப்பட்டாலும், சூழ்ந்து நிற்கும் வறுமையால் திரைமறைவில் டீல் பேசப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி லட்சுமியின் வீட்டிற்கே வந்து குழந்தையைக் கேட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு சென்னை தம்பதி அனுப்பியதாகக் கூறி 3 பெண்கள் லட்சுமியின் வீட்டிற்குள் நைசாக நுழைந்துள்ளனர். அவர்கள் லட்சுமியிடம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிட்டு, 45 நாள்களேயான அந்தப் பிஞ்சு குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு, குழந்தையைக் காணவில்லை என்று லட்சுமி போலீசில் புகாரளிக்க, காரைக்குடி தெற்கு போலீஸார் களமிறங்கி குழந்தையை அதிரடியாக மீட்டனர். ஆனால், போலீஸாரின் விசாரணையில் தான் கதையே வேறு என்பது தெரியவந்தது!
`மீதி காசு வராததால் வந்த புகார்!”
இந்த விவகாரம் குறித்து காரைக்குடி ஏ.எஸ்.பி ஆஷிஷ் புன்யாவை நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.