40 வயதில் சர்க்கரை நோய்… குதிகாலில் வலி… காரணமும், தீர்வும் என்ன? | Diabetes at age 40… Heel pain… What are the causes and solutions?

Spread the love

நீங்கள் முதலில் எலும்பியல் சிகிச்சை மருத்துவரை (Orthopaedic specialist) அணுகவும். முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம்தான் வலிக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். தேவைப்பட்டால் ஸ்கேன் (Ultrasound) அல்லது பிற இமேஜிங் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

குதிகால் மீதான அழுத்தத்தைக் குறைக்க வேண்டியது முக்கியம்.  ஓடுதல், குதித்தல், நீண்ட நேரம் நிற்பது மற்றும் வலியை அதிகரிக்கும் செயல்பாடுகளைத் தவிர்க்கவும். குஷன் (cushioning) தன்மை கொண்ட காலணிகளைத் தேர்ந்தெடுக்கவும், வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.

துணியில் சுற்றப்பட்ட ஐஸ் கட்டியை வலி உள்ள இடத்தில்  10-15 நிமிடங்கள் வைக்கவும்.  நீரிழிவு நோயினால் உணர்ச்சித் திறன் குறைந்திருந்தால், ஐஸை நேரடியாக சருமத்தில் படும்படி வைக்க வேண்டாம்.

ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியம். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணித்து, உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ரத்தச் சர்க்கரையைக்  கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, திசுக்கள் குணமடைய உதவுவதோடு, சிக்கல்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

துணியில் சுற்றப்பட்ட ஐஸ் கட்டியை வலி உள்ள இடத்தில்  10-15 நிமிடங்கள் வைக்கவும்.

துணியில் சுற்றப்பட்ட ஐஸ் கட்டியை வலி உள்ள இடத்தில் 10-15 நிமிடங்கள் வைக்கவும்.
AI image

சுய மருத்துவம் செய்வதைத் தவிர்க்கவும்.  மருத்துவ ஆலோசனையின்றி வலி நிவாரணிகள், ஸ்டீராய்டு ஊசிகள் அல்லது கடுமையான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை (stretching exercises) தொடங்க வேண்டாம்.

உங்களுக்குத் திடீரென கடுமையான வலி, சத்தம் (popping sensation) கேட்பது, எடையைத் தாங்க முடியாமை, கடுமையான வீக்கம், சிவந்து போதல், சூடான உணர்வு, காயம் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நீரிழிவு உள்ள ஒருவருக்கு பாதம் சிவந்து, சூடாகவும், வீக்கமாகவும் இருப்பது உடனடி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அறிகுறி.

வலி பல மாதங்களாகத் தொடர்வதாலும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாலும், வீட்டிலேயே சுய மருத்துவம் செய்வதை விட்டுவிட்டு, நேரில் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஆரம்பகால நோயறிதலும் சரியான சிகிச்சையும்  வேறு சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும்.

டாக்டர் ஜெயஸ்ரீ கிருஷ்ணன்:

சென்னை, வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் பொது மருத்துவராகப் பணிபுரிகிறார். இத்துறையில் 21 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *