காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்!
பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹான், இஃப்திகார் அகமது, ஹசன் அலி, ஹைதர் அலி, ஹுசைன் தலாத், உசாமா மிர், ஹுனைன் ஷா உள்ளிட்டோர் இந்தத் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நேபாளம் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PCB ஒப்பந்த விதிகளின்படி, தேசிய அணியின் சர்வதேசப் போட்டிகளுடன் மோதல் இல்லாதபோது வீரர்கள் தனியார் லீக்குகளில் விளையாடலாம். தற்போது, இந்த வீரர்கள் யாரும் பாகிஸ்தானின் டெஸ்ட் அல்லது ஒருநாள் அணிகளில் இடம்பெறவில்லை.

உடனடி டி20 சர்வதேசப் போட்டிகளும் அட்டவணையில் இல்லை. இருப்பினும், கட்டணக் கோரிக்கைக்கும் அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகவில்லை.
இந்த நிலையில், வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டனர்… தொடர் தொடங்கப்போகிறது… ஆனால், விளையாடுவதற்கான அனுமதி மட்டும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தச் சர்ச்சைக்கு PCB என்ன பதிலளிக்கப் போகிறது? பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டபடி நேபாள லீக்கில் களமிறங்குவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!