444 கிடாய்கள்; 1,800 சேவல்கள்; 16 ஆயிரம் பேர்… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரமாண்ட கறி விருந்து!

Spread the love

 மாலை 6 மணிக்கு மேல் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது கோயிலின் கட்டுப்பாடாகக் கூறப்படுகிறது. கோயிலின் வழக்கமான பூஜைகள் மற்றும் கொடை விழாவின்போது மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை. மணி ஓசையுடன் மட்டுமே பூஜைகள் நடைபெறுகிறது. இந்தாண்டு கடந்த 15-ம் தேதி புரட்டாசி கோயில் கொடை விழாவில் மதியம் உச்சிக்கால பூஜைக்குப் பிறகு பெண்களுக்கு சாம்பார், கூட்டுப் பொரியலுடன் சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது.

விருந்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

விருந்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

அன்றிரவு முதல் மறுநாளான காலை வரை கிடா விருந்துக்காக  444 ஆடுகளும் 1,800 சேவல்களும் பலியிடப்பட்டு வெட்டப்பட்டது. சுமார் 100 பேர் இறைச்சி வெட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3,000 கிலோ அரிசியில் உணவு சமைக்கப்பட்டு  சுமார் 15,000 பேருக்கு பிரம்மாண்டமான  கறிவிருந்து நடைபெற்றது. காலையில் தொடங்கிய விருந்து இரவு வரை நடைபெற்றது. கிடா விருந்தில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லாததால், ஆண்களும் சிறுவர்களும் நீண்ட வரிசையில் நின்று உணவருந்தினர். கறி விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பக்தர்களின் பைக்குகள், கார், வேன்கள் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு சாலையின் இரு புறமும் வரிசைக்கடி நின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *