”ஜனநாயகன் TVK படம் இல்ல… “ – விளக்கம் அளித்த எச்.வினோத்..! – Kumudam

Spread the love

நடிகரும் முதலமைச்சருமான விஜய் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு திரையரங்குகளில் கட் அவுட்கள், பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் தொடர்பான பிரச்னைகளால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதையடுத்து ஏற்பட்ட சட்டரீதியான முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், தற்போது ஏ சான்றிதழுடன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் முழு பதிப்பு இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகின. சுமார் 1.2 கோடி பேர் ஆன்லைனில் படத்தை பார்த்ததாகவும் கூறப்பட்டது. பல்வேறு தடைகளை கடந்து ‘ஜனநாயகன்’ திரையரங்குகளை வந்தடைவது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தவெக-வை மட்டும் புகழ்ந்து பேசும் படமோ, வழக்கமான கமர்ஷியல் படமோ இல்லை என்று அதன் இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். 

தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இயக்குநர் வினோத், இது தேர்தலுக்கு முன்பு எடுத்த திரைப்படம் என்பதால், இப்படத்தில் அதே கண்டெண்ட்தான் இருக்கும் என்றும், இதில் மாற்றங்கள் செய்ய சென்சாரில் அனுமதிக்கவில்லை என்றும், படத்தினுடைய கருத்தில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது எனச் சொல்லிவிட்டார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், லீக் ஆன வெர்ஷனிலிருந்து, இந்தப் படத்தில் புதிய விஷயங்கள் நேச்சுரலாகவே அமைந்திருப்பதாக கூறிய எச்.வினோத், திரைப்படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, நிறைய பேர் ‘ஜன நாயகன்’ படத்தைப் பார்த்துவிட்டார்கள் என்பதால், அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்ப்பார்களா எனத் தெரியவில்லை என்றும், அவர்கள் விஜய் சாரைப் பார்க்க வேண்டும் என நினைத்து தியேட்டருக்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் வினோத், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெறும் கமர்ஷியல் திரைப்படம் மட்டும் கிடையாது. இதில் தவெக புகழ் பாடும் விஷயங்கள் மட்டும் கிடையாது. இதில் சென்சிடிவ்வான அரசியலைப் பேசியிருப்பதாகவும், அந்தக் கண்டெண்டைப் பார்த்து மக்கள் விவாதிக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று ஜனநாயகன் திரைப்பட்த்தின் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *