International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா 5ம் நாள் இரவாக இன்றும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. ஈரானின் படைகளை வலுவிழக்க செய்யும் நோக்கில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டிருக்கும் தகவலில், புதிய தாக்குதல் மதியம் 2 மணியிலிருந்து தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்ன பஞ்சாயத்து?
அமெரிக்காவுக்கும்-இஸ்லாமிய நாடுகளுக்கும் ஆரம்பத்திலிருந்து ஏழரை சனி பொருத்தம்தான். இதில் ஈரான் தான் அமெரிக்காவை ஏகத்துக்கு எதிர்த்தது. பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான கரன்சியை உருவாக்குவது, ரஷ்யாவுடன் கை கோர்த்து நவீன ஆயுதங்களை செய்வது, அமெரிக்காவை மதிக்காமல் இருப்பது, மற்ற அரபு நாடுகளுக்கும் அமெரிக்க எதிர்ப்பை ஊக்குவிப்பது, யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்தது.. இதெலெ்லாம் டிரம்புக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எனவே இஸ்ரேலை வைத்து ஈரான் மீது தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. பின்னர் அமெரிக்காவை நேரடியாக களமிறங்கியது. இந்த போர்.. மொத்த அரபு நாடுகளையும் பாதித்தது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி அப்படியே ஸ்டாப் ஆனது. மறுபுறம், ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய், ஹார்முஸ் நீரிணையை தாண்ட முடியாமல் தவித்தது. இந்த நீரிணையை ஈரான் தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து 20-30% வரை இந்த நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. எனவே இதனை கட்டுப்படுத்த அமெரிக்க முயற்சிக்க.. போர் பெரிய அளவில் வெடித்தது. இந்த நேரத்தில்தான், உலக நாடுகள் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க வலியுறுத்தின. இதையடுத்து அமைதி ஒப்பந்தமும் உருவானது.
ஆனால், இடையில் மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இன்று 5ம் நாள் இரவாக, ஈரானின் பல்வேறு பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு இன்னும் ஈரான் தரப்பிலிருந்து எந்த பதில் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இருப்பினும் பதில் தாக்குதல் சீக்கிரமாகவே தொடங்கும் என்று ஈரான் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.