நான் என் எடப்பாடி தொகுதிக்குள் போகவில்லை, என்னை என் மக்கள் நேசிக்கின்றனர். கரூரில் சுரண்டி முடித்தாகிவிட்டது, கோவை செல்வம் கொழிக்கும் பகுதி, அவர் இங்கு தங்க நகை தொழிலையும் ஆக்கிரமித்து விடுவார். தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொள்வீர்கள். மனிதாபிமானம் இல்லலாத ஒருவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார், 5 கட்சி அமாவாசை அவர். அரக்கனைவிட கொடூரமானவர்.

எங்கள் தொண்டரைக்கூட உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. முதலில் இருந்த பழனிசாமி வேறு, இனிமேல் வரும் பழனிசாமி வேறு. கரூரில் எங்கள் கட்சி ஆள் மீது பொய் வழக்கு போடுகின்றீர்கள், ஆட்சி மாறும் போது காட்சி மாறும். அரசு அதகாரிகள் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். அரசு ஊழியர்கள் அதிகாரிகள் தவறான செயலில் ஈடுபட்டால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எவராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன், என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.