50 நாளில் 90 செஷன்ஸ்! ‘டிசி’ படத்திற்காக லோகேஷ் கனகராஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் | Lokesh Kanagaraj’s Transformation for ‘DC’: 90 Workout Sessions in 50 Days!

Spread the love

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள “டிசி’ படம் வசூலை அள்ளி வருகிறது. வாமிகா கேபி, கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்களும், பின்னணி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடலளவில் தயாரான வீடியோவை செலிபிரிட்டி டிரெய்னர் சந்தீப், அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

அந்தக் காணொளியில் சந்தீப், “இந்த உடலமைப்பின் டிரான்பர்மேஷனுக்காக 50 நாட்களில் 90 செஷன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

காலையிலும் மாலையிலும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வது சாதாரண விஷயம் இல்லை. தினமும் ஜிம்மில் முழுமையாக உடற்பயிற்சி செய்துவிட்டு, அதே எனர்ஜியோடு அடுத்த நாளுக்கும் தயாராவது ரொம்பவே கஷ்டமான விஷயம்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *