50-ல் தொடங்கி, 60-ல் சிம்பிளா 1 கோடி சேர்த்து, நிம்மதியா ரிட்டர்யர் ஆகணுமா? இதோ கிளியர்கட் பிளானிங்!

Spread the love

ஓய்வுக் காலத்துக்கான பணத்தை 25 அல்லது 35 வயதிலேயே நீங்கள் சேர்க்கத் தொடங்கினால், மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் பணம் சேர்த்து 1 கோடி, 3 கோடி என்கிற அளவுக்கு எளிதாகப் பணம் சேர்க்க முடியும்.

உங்களுக்கு இப்போது 30 வயது. அடுத்த 30 வருஷத்துக்கு பணம் சேர்க்க விரும்புகிறீர்கள். மாதந்தோறும் ரூ.10,000 சேர்க்கிறீர்கள். இந்த முதலீடு ஆண்டுதோறும் 12% என்கிற அளவில் ஆண்டு தோறும் லாபம் தந்திருந்தால், உங்களுடைய 60-வது வயதில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கும் தெரியுமா? ரூ.3.08 கோடி. 15% என்கிற அளவில் லாபம் கிடைத்திருந்தால், ரூ.5.63 கோடி உங்களிடம் இருக்கும்.

10,000 ரூபாய் என்ன, என்னால் மாதந்தோறும் ரூ.20,000 சேர்க்க முடியும் எனில், அதற்கு 12% என்கிற அளவில் ஆண்டுதோறும் லாபம் கிடைத்திருந்தால், நீங்கள் மொத்தம் ரூ.6.16 கோடி. 15% என்கிற அளவில் ஆண்டுதோறும் லாபம் கிடைத்தால், ரூ.11.26 கோடி…

அடேங்கப்பா, என்று ஆச்சரியப்படாதீர்கள். இது நிச்சயம் அடையக்கூடிய இலக்குதான். 30 ஆண்டுகளுக்கும் மாதந்தவறாமல் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீடு அவ்வபோது சரியான அளவு லாபத்தைத் தருகிறதா என்றும் பார்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் தொடர்ந்து செய்தால், கோடிகள் என்பது அசால்ட்டுதான்.

சரி, எனக்கு இப்போது 50 வயதாகிவிட்டது. இதுவரை எஸ்.ஐ.பி மூலம் பணம் எதுவும் சேர்க்கவில்லை. அடுத்த 10 வருஷத்தில் நான் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேர்க்க முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும். எப்படி…?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *