சட்டமன்ற தேர்தலில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க., தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதே போன்று பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் 5 தொகுதிகள் காலியாக இருந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் சி.விஜயபாஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அவரும் தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 6 தொகுதிகள் தற்போது காலியாகி உள்ளது. இந்த தொகுதிகளுக்கு அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்தி ஆக வேண்டும்.
அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து, ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ‘சீட்’ கேட்டு, கட்சி தலைமைக்கு, த.வெ.க.,வினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தவெகவில் தங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களில், விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா தவிர்த்து மற்றவர்களுக்கு சீட் இல்லை என தவெக தரப்பு கறாராக சொல்லிவிட்டது. மதுராந்தகம் தொகுதி தங்களுக்கு வேண்டும் என விசிக தவெகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பெருந்துறையில் செங்கோட்டையன் ஆதரவாளர் அருணாசலத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால், த.வெ.க., ஈரோடு கிழக்கு மா.செ., வெங்கடேஷ் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ஜெயகுமார் உள்ளிட்டோரும் ‘சீட்’ வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். தாராபுரத்தில் தவெக நிர்வாகி கவுரி சித்ராவுக்கும் ராஜினாமா செய்த சத்யபாமா இடையே போட்டி நிலவுகிறது.
விராலிமலை தொகுதியில் மீண்டும் விஜய்பாஸ்கர் போட்டியிடுவார் என தெரிகிறது. இதனால் அமைச்சர் பர்வேஸ்க்கு நெருக்கடி முற்றியிருக்கிறது. இதனால் விஜயபாஸ்கருக்கு சீட் கொடுக்கக்கூடாது என பர்வேஸ் லாபி செய்து வருவதாக தெரிகிறது. த.வெ.க.,வை நம்பி பதவியை ராஜினாமா செய்து, அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு ‘சீட்’ கொடுக்காமல், லோக்கல் தவெக நிர்வாகி கொடுக்க வேண்டும் கட்சி தலைமை அழுத்தம் கொடுக்க தொடங்கி இருப்பதால், சீட் பெறுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.


