கூடங்குளம் அணுமின் நிலைய தரவுக் கசிவு: பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சை|Kudankulam Data Leak: Is India’s Largest Nuclear Plant Safe?

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது கூடங்குளம் அணுமின் நிலையம். இது ரஷ்ய நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் ஆகும்.

இங்கே தற்போது தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரு அலகுகள் செயல்பாட்டில் உள்ளன.

இன்னும் 4 அலகுகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், “World Leaks’ என்னும் ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான கோப்புகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளது.

அதில் அணுமின் நிலையத்தின் சில வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள், ஆய்வுப் பதிவுகள், உபகரணங்களின் மதிப்பாய்வுகள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணுமின் கழகம் லிமிடெட்டின் பொறுப்புத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி. ராஜேஷ்

இந்திய அணுமின் கழகம் லிமிடெட்டின் பொறுப்புத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வி. ராஜேஷ்

“இவை அணுசக்திப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத, பொதுவான சர்வீஸ் பேலன்ஸ் ஆஃப் பிளான்ட் (balance of plant) அமைப்புகளைச் சார்ந்தவை. இதனால், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *