70 முதியவருடன் இளம் பெண் உல்லாசம்: 6 சவரன் நகையை அபேஸ் செய்த அவலம் – Kumudam

Spread the love

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் அவரது மகளுடன் வசித்து வருகிறார். பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் முதியவர் மகள் வெளியூர் சென்றுவிட்டார். இதனால் முதியவர் வீட்டில் தனியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் முதியவருக்கு பூ வியாபாரம் செய்யும் இளம் பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அந்த இளம் பெண் அண்ணாநகர் சாந்தி காலணியில் பூ வியாபாரம் செய்து வருகிறது. அந்த 38 வயது இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து முதியவர் உல்லாசமாக இருந்து இருக்கிறார்.

உல்லாசத்தை அனுபவித்த அந்த இளம் பெண் முதியவர் வீட்டை விட்டு கிளம்பும் போது, பீரோவில் இருந்த 6 ½ சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்து சென்று இருக்கிறார். நேற்றைய தினம் முதியவரின் மகள் ஊரில் இருந்து திரும்பிய நிலையில், விசேஷத்திற்கு செல்வதற்காக பீரோவில் இருந்த நகையை எடுக்க திறந்து இருக்கிறார். அப்போது நகை மாயமாகி இருப்பதை கண்டு முதியவர் மகள் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து முதியவரிடம் அவரது மகள் விசாரித்த வீட்டு வேலைக்காக அந்த பெண்ணை வரவழைத்ததாக சொல்லி சமாளித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கோயம்பேடு காவல்நிலையத்தில் நகை திருடு போனது தொடர்பாக முதியவர் மகள் புகார் அளித்தார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய இளம்பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *